An-Nazi'at( النازعات)
Original,King Fahad Quran Complex(الأصلي,مجمع الملك فهد القرآن)
show/hide
Unknown(தமிழ்)
show/hide
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ وَالنّٰزِعٰتِ غَرقًا(1)
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-(1)
وَالنّٰشِطٰتِ نَشطًا(2)
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-(2)
وَالسّٰبِحٰتِ سَبحًا(3)
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-(3)
فَالسّٰبِقٰتِ سَبقًا(4)
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-(4)
فَالمُدَبِّرٰتِ أَمرًا(5)
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-(5)
يَومَ تَرجُفُ الرّاجِفَةُ(6)
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;(6)
تَتبَعُهَا الرّادِفَةُ(7)
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.(7)
قُلوبٌ يَومَئِذٍ واجِفَةٌ(8)
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.(8)
أَبصٰرُها خٰشِعَةٌ(9)
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.(9)
يَقولونَ أَءِنّا لَمَردودونَ فِى الحافِرَةِ(10)
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.(10)
أَءِذا كُنّا عِظٰمًا نَخِرَةً(11)
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"(11)
قالوا تِلكَ إِذًا كَرَّةٌ خاسِرَةٌ(12)
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.(12)
فَإِنَّما هِىَ زَجرَةٌ وٰحِدَةٌ(13)
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-(13)
فَإِذا هُم بِالسّاهِرَةِ(14)
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.(14)
هَل أَتىٰكَ حَديثُ موسىٰ(15)
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?(15)
إِذ نادىٰهُ رَبُّهُ بِالوادِ المُقَدَّسِ طُوًى(16)
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,(16)
اذهَب إِلىٰ فِرعَونَ إِنَّهُ طَغىٰ(17)
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."(17)
فَقُل هَل لَكَ إِلىٰ أَن تَزَكّىٰ(18)
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.(18)
وَأَهدِيَكَ إِلىٰ رَبِّكَ فَتَخشىٰ(19)
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).(19)
فَأَرىٰهُ الءايَةَ الكُبرىٰ(20)
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.(20)
فَكَذَّبَ وَعَصىٰ(21)
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.(21)
ثُمَّ أَدبَرَ يَسعىٰ(22)
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.(22)
فَحَشَرَ فَنادىٰ(23)
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.(23)
فَقالَ أَنا۠ رَبُّكُمُ الأَعلىٰ(24)
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.(24)
فَأَخَذَهُ اللَّهُ نَكالَ الءاخِرَةِ وَالأولىٰ(25)
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.(25)
إِنَّ فى ذٰلِكَ لَعِبرَةً لِمَن يَخشىٰ(26)
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.(26)
ءَأَنتُم أَشَدُّ خَلقًا أَمِ السَّماءُ ۚ بَنىٰها(27)
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.(27)
رَفَعَ سَمكَها فَسَوّىٰها(28)
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.(28)
وَأَغطَشَ لَيلَها وَأَخرَجَ ضُحىٰها(29)
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.(29)
وَالأَرضَ بَعدَ ذٰلِكَ دَحىٰها(30)
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.(30)
أَخرَجَ مِنها ماءَها وَمَرعىٰها(31)
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.(31)
وَالجِبالَ أَرسىٰها(32)
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.(32)
مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم(33)
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).(33)
فَإِذا جاءَتِ الطّامَّةُ الكُبرىٰ(34)
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,(34)
يَومَ يَتَذَكَّرُ الإِنسٰنُ ما سَعىٰ(35)
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.(35)
وَبُرِّزَتِ الجَحيمُ لِمَن يَرىٰ(36)
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.(36)
فَأَمّا مَن طَغىٰ(37)
எனவே, எவன் வரம்பை மீறினானோ -(37)
وَءاثَرَ الحَيوٰةَ الدُّنيا(38)
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-(38)
فَإِنَّ الجَحيمَ هِىَ المَأوىٰ(39)
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.(39)
وَأَمّا مَن خافَ مَقامَ رَبِّهِ وَنَهَى النَّفسَ عَنِ الهَوىٰ(40)
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,(40)
فَإِنَّ الجَنَّةَ هِىَ المَأوىٰ(41)
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.(41)
يَسـَٔلونَكَ عَنِ السّاعَةِ أَيّانَ مُرسىٰها(42)
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.(42)
فيمَ أَنتَ مِن ذِكرىٰها(43)
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?(43)
إِلىٰ رَبِّكَ مُنتَهىٰها(44)
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.(44)
إِنَّما أَنتَ مُنذِرُ مَن يَخشىٰها(45)
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,(45)
كَأَنَّهُم يَومَ يَرَونَها لَم يَلبَثوا إِلّا عَشِيَّةً أَو ضُحىٰها(46)
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.(46)