An-Nabaa( النبأ)
Original,King Fahad Quran Complex(الأصلي,مجمع الملك فهد القرآن)
show/hide
Unknown(தமிழ்)
show/hide
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ عَمَّ يَتَساءَلونَ(1)
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?(1)
عَنِ النَّبَإِ العَظيمِ(2)
மகத்தான அச்செய்தியைப் பற்றி,(2)
الَّذى هُم فيهِ مُختَلِفونَ(3)
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,(3)
كَلّا سَيَعلَمونَ(4)
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.(4)
ثُمَّ كَلّا سَيَعلَمونَ(5)
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.(5)
أَلَم نَجعَلِ الأَرضَ مِهٰدًا(6)
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?(6)
وَالجِبالَ أَوتادًا(7)
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?(7)
وَخَلَقنٰكُم أَزوٰجًا(8)
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.(8)
وَجَعَلنا نَومَكُم سُباتًا(9)
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.(9)
وَجَعَلنَا الَّيلَ لِباسًا(10)
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.(10)
وَجَعَلنَا النَّهارَ مَعاشًا(11)
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.(11)
وَبَنَينا فَوقَكُم سَبعًا شِدادًا(12)
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.(12)
وَجَعَلنا سِراجًا وَهّاجًا(13)
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.(13)
وَأَنزَلنا مِنَ المُعصِرٰتِ ماءً ثَجّاجًا(14)
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.(14)
لِنُخرِجَ بِهِ حَبًّا وَنَباتًا(15)
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.(15)
وَجَنّٰتٍ أَلفافًا(16)
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).(16)
إِنَّ يَومَ الفَصلِ كانَ ميقٰتًا(17)
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.(17)
يَومَ يُنفَخُ فِى الصّورِ فَتَأتونَ أَفواجًا(18)
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.(18)
وَفُتِحَتِ السَّماءُ فَكانَت أَبوٰبًا(19)
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.(19)
وَسُيِّرَتِ الجِبالُ فَكانَت سَرابًا(20)
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.(20)
إِنَّ جَهَنَّمَ كانَت مِرصادًا(21)
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.(21)
لِلطّٰغينَ مَـٔابًا(22)
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.(22)
لٰبِثينَ فيها أَحقابًا(23)
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.(23)
لا يَذوقونَ فيها بَردًا وَلا شَرابًا(24)
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.(24)
إِلّا حَميمًا وَغَسّاقًا(25)
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.(25)
جَزاءً وِفاقًا(26)
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.(26)
إِنَّهُم كانوا لا يَرجونَ حِسابًا(27)
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.(27)
وَكَذَّبوا بِـٔايٰتِنا كِذّابًا(28)
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.(28)
وَكُلَّ شَيءٍ أَحصَينٰهُ كِتٰبًا(29)
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.(29)
فَذوقوا فَلَن نَزيدَكُم إِلّا عَذابًا(30)
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).(30)
إِنَّ لِلمُتَّقينَ مَفازًا(31)
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.(31)
حَدائِقَ وَأَعنٰبًا(32)
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.(32)
وَكَواعِبَ أَترابًا(33)
ஒரே வயதுள்ள கன்னிகளும்.(33)
وَكَأسًا دِهاقًا(34)
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).(34)
لا يَسمَعونَ فيها لَغوًا وَلا كِذّٰبًا(35)
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.(35)
جَزاءً مِن رَبِّكَ عَطاءً حِسابًا(36)
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.(36)
رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُمَا الرَّحمٰنِ ۖ لا يَملِكونَ مِنهُ خِطابًا(37)
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.(37)
يَومَ يَقومُ الرّوحُ وَالمَلٰئِكَةُ صَفًّا ۖ لا يَتَكَلَّمونَ إِلّا مَن أَذِنَ لَهُ الرَّحمٰنُ وَقالَ صَوابًا(38)
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.(38)
ذٰلِكَ اليَومُ الحَقُّ ۖ فَمَن شاءَ اتَّخَذَ إِلىٰ رَبِّهِ مَـٔابًا(39)
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.(39)
إِنّا أَنذَرنٰكُم عَذابًا قَريبًا يَومَ يَنظُرُ المَرءُ ما قَدَّمَت يَداهُ وَيَقولُ الكافِرُ يٰلَيتَنى كُنتُ تُرٰبًا(40)
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.(40)