Al-Waqi'a( الواقعة)
Original,King Fahad Quran Complex(الأصلي,مجمع الملك فهد القرآن)
show/hide
Unknown(தமிழ்)
show/hide
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ إِذا وَقَعَتِ الواقِعَةُ(1)
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்(1)
لَيسَ لِوَقعَتِها كاذِبَةٌ(2)
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.(2)
خافِضَةٌ رافِعَةٌ(3)
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.(3)
إِذا رُجَّتِ الأَرضُ رَجًّا(4)
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.(4)
وَبُسَّتِ الجِبالُ بَسًّا(5)
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,(5)
فَكانَت هَباءً مُنبَثًّا(6)
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.(6)
وَكُنتُم أَزوٰجًا ثَلٰثَةً(7)
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.(7)
فَأَصحٰبُ المَيمَنَةِ ما أَصحٰبُ المَيمَنَةِ(8)
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)(8)
وَأَصحٰبُ المَشـَٔمَةِ ما أَصحٰبُ المَشـَٔمَةِ(9)
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)(9)
وَالسّٰبِقونَ السّٰبِقونَ(10)
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.(10)
أُولٰئِكَ المُقَرَّبونَ(11)
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.(11)
فى جَنّٰتِ النَّعيمِ(12)
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.(12)
ثُلَّةٌ مِنَ الأَوَّلينَ(13)
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,(13)
وَقَليلٌ مِنَ الءاخِرينَ(14)
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -(14)
عَلىٰ سُرُرٍ مَوضونَةٍ(15)
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -(15)
مُتَّكِـٔينَ عَلَيها مُتَقٰبِلينَ(16)
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.(16)
يَطوفُ عَلَيهِم وِلدٰنٌ مُخَلَّدونَ(17)
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.(17)
بِأَكوابٍ وَأَباريقَ وَكَأسٍ مِن مَعينٍ(18)
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).(18)
لا يُصَدَّعونَ عَنها وَلا يُنزِفونَ(19)
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.(19)
وَفٰكِهَةٍ مِمّا يَتَخَيَّرونَ(20)
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -(20)
وَلَحمِ طَيرٍ مِمّا يَشتَهونَ(21)
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).(21)
وَحورٌ عينٌ(22)
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.(22)
كَأَمثٰلِ اللُّؤلُؤِ المَكنونِ(23)
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).(23)
جَزاءً بِما كانوا يَعمَلونَ(24)
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.(24)
لا يَسمَعونَ فيها لَغوًا وَلا تَأثيمًا(25)
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.(25)
إِلّا قيلًا سَلٰمًا سَلٰمًا(26)
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).(26)
وَأَصحٰبُ اليَمينِ ما أَصحٰبُ اليَمينِ(27)
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)(27)
فى سِدرٍ مَخضودٍ(28)
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:(28)
وَطَلحٍ مَنضودٍ(29)
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:(29)
وَظِلٍّ مَمدودٍ(30)
இன்னும், நீண்ட நிழலிலும்,(30)
وَماءٍ مَسكوبٍ(31)
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,(31)
وَفٰكِهَةٍ كَثيرَةٍ(32)
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -(32)
لا مَقطوعَةٍ وَلا مَمنوعَةٍ(33)
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -(33)
وَفُرُشٍ مَرفوعَةٍ(34)
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).(34)
إِنّا أَنشَأنٰهُنَّ إِنشاءً(35)
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,(35)
فَجَعَلنٰهُنَّ أَبكارًا(36)
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,(36)
عُرُبًا أَترابًا(37)
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,(37)
لِأَصحٰبِ اليَمينِ(38)
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).(38)
ثُلَّةٌ مِنَ الأَوَّلينَ(39)
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,(39)
وَثُلَّةٌ مِنَ الءاخِرينَ(40)
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).(40)
وَأَصحٰبُ الشِّمالِ ما أَصحٰبُ الشِّمالِ(41)
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)(41)
فى سَمومٍ وَحَميمٍ(42)
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -(42)
وَظِلٍّ مِن يَحمومٍ(43)
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.(43)
لا بارِدٍ وَلا كَريمٍ(44)
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.(44)
إِنَّهُم كانوا قَبلَ ذٰلِكَ مُترَفينَ(45)
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.(45)
وَكانوا يُصِرّونَ عَلَى الحِنثِ العَظيمِ(46)
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.(46)
وَكانوا يَقولونَ أَئِذا مِتنا وَكُنّا تُرابًا وَعِظٰمًا أَءِنّا لَمَبعوثونَ(47)
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.(47)
أَوَءاباؤُنَا الأَوَّلونَ(48)
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)(48)
قُل إِنَّ الأَوَّلينَ وَالءاخِرينَ(49)
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.(49)
لَمَجموعونَ إِلىٰ ميقٰتِ يَومٍ مَعلومٍ(50)
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.(50)
ثُمَّ إِنَّكُم أَيُّهَا الضّالّونَ المُكَذِّبونَ(51)
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,(51)
لَءاكِلونَ مِن شَجَرٍ مِن زَقّومٍ(52)
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.(52)
فَمالِـٔونَ مِنهَا البُطونَ(53)
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.(53)
فَشٰرِبونَ عَلَيهِ مِنَ الحَميمِ(54)
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.(54)
فَشٰرِبونَ شُربَ الهيمِ(55)
"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."(55)
هٰذا نُزُلُهُم يَومَ الدّينِ(56)
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.(56)
نَحنُ خَلَقنٰكُم فَلَولا تُصَدِّقونَ(57)
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?(57)
أَفَرَءَيتُم ما تُمنونَ(58)
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?(58)
ءَأَنتُم تَخلُقونَهُ أَم نَحنُ الخٰلِقونَ(59)
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(59)
نَحنُ قَدَّرنا بَينَكُمُ المَوتَ وَما نَحنُ بِمَسبوقينَ(60)
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.(60)
عَلىٰ أَن نُبَدِّلَ أَمثٰلَكُم وَنُنشِئَكُم فى ما لا تَعلَمونَ(61)
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).(61)
وَلَقَد عَلِمتُمُ النَّشأَةَ الأولىٰ فَلَولا تَذَكَّرونَ(62)
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?(62)
أَفَرَءَيتُم ما تَحرُثونَ(63)
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?(63)
ءَأَنتُم تَزرَعونَهُ أَم نَحنُ الزّٰرِعونَ(64)
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?(64)
لَو نَشاءُ لَجَعَلنٰهُ حُطٰمًا فَظَلتُم تَفَكَّهونَ(65)
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.(65)
إِنّا لَمُغرَمونَ(66)
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.(66)
بَل نَحنُ مَحرومونَ(67)
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).(67)
أَفَرَءَيتُمُ الماءَ الَّذى تَشرَبونَ(68)
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?(68)
ءَأَنتُم أَنزَلتُموهُ مِنَ المُزنِ أَم نَحنُ المُنزِلونَ(69)
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?(69)
لَو نَشاءُ جَعَلنٰهُ أُجاجًا فَلَولا تَشكُرونَ(70)
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?(70)
أَفَرَءَيتُمُ النّارَ الَّتى تورونَ(71)
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?(71)
ءَأَنتُم أَنشَأتُم شَجَرَتَها أَم نَحنُ المُنشِـٔونَ(72)
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?(72)
نَحنُ جَعَلنٰها تَذكِرَةً وَمَتٰعًا لِلمُقوينَ(73)
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.(73)
فَسَبِّح بِاسمِ رَبِّكَ العَظيمِ(74)
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.(74)
۞ فَلا أُقسِمُ بِمَوٰقِعِ النُّجومِ(75)
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.(75)
وَإِنَّهُ لَقَسَمٌ لَو تَعلَمونَ عَظيمٌ(76)
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.(76)
إِنَّهُ لَقُرءانٌ كَريمٌ(77)
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.(77)
فى كِتٰبٍ مَكنونٍ(78)
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.(78)
لا يَمَسُّهُ إِلَّا المُطَهَّرونَ(79)
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.(79)
تَنزيلٌ مِن رَبِّ العٰلَمينَ(80)
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.(80)
أَفَبِهٰذَا الحَديثِ أَنتُم مُدهِنونَ(81)
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?(81)
وَتَجعَلونَ رِزقَكُم أَنَّكُم تُكَذِّبونَ(82)
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?(82)
فَلَولا إِذا بَلَغَتِ الحُلقومَ(83)
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -(83)
وَأَنتُم حينَئِذٍ تَنظُرونَ(84)
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.(84)
وَنَحنُ أَقرَبُ إِلَيهِ مِنكُم وَلٰكِن لا تُبصِرونَ(85)
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.(85)
فَلَولا إِن كُنتُم غَيرَ مَدينينَ(86)
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -(86)
تَرجِعونَها إِن كُنتُم صٰدِقينَ(87)
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!(87)
فَأَمّا إِن كانَ مِنَ المُقَرَّبينَ(88)
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.(88)
فَرَوحٌ وَرَيحانٌ وَجَنَّتُ نَعيمٍ(89)
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.(89)
وَأَمّا إِن كانَ مِن أَصحٰبِ اليَمينِ(90)
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,(90)
فَسَلٰمٌ لَكَ مِن أَصحٰبِ اليَمينِ(91)
"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).(91)
وَأَمّا إِن كانَ مِنَ المُكَذِّبينَ الضّالّينَ(92)
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்(92)
فَنُزُلٌ مِن حَميمٍ(93)
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.(93)
وَتَصلِيَةُ جَحيمٍ(94)
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).(94)
إِنَّ هٰذا لَهُوَ حَقُّ اليَقينِ(95)
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.(95)
فَسَبِّح بِاسمِ رَبِّكَ العَظيمِ(96)
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.(96)