Abasa( عبس)
Original,King Fahad Quran Complex(الأصلي,مجمع الملك فهد القرآن)
show/hide
Unknown(தமிழ்)
show/hide
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ عَبَسَ وَتَوَلّىٰ(1)
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.(1)
أَن جاءَهُ الأَعمىٰ(2)
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,(2)
وَما يُدريكَ لَعَلَّهُ يَزَّكّىٰ(3)
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?(3)
أَو يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكرىٰ(4)
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.(4)
أَمّا مَنِ استَغنىٰ(5)
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-(5)
فَأَنتَ لَهُ تَصَدّىٰ(6)
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.(6)
وَما عَلَيكَ أَلّا يَزَّكّىٰ(7)
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.(7)
وَأَمّا مَن جاءَكَ يَسعىٰ(8)
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,(8)
وَهُوَ يَخشىٰ(9)
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-(9)
فَأَنتَ عَنهُ تَلَهّىٰ(10)
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.(10)
كَلّا إِنَّها تَذكِرَةٌ(11)
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.(11)
فَمَن شاءَ ذَكَرَهُ(12)
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.(12)
فى صُحُفٍ مُكَرَّمَةٍ(13)
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.(13)
مَرفوعَةٍ مُطَهَّرَةٍ(14)
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.(14)
بِأَيدى سَفَرَةٍ(15)
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-(15)
كِرامٍ بَرَرَةٍ(16)
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.(16)
قُتِلَ الإِنسٰنُ ما أَكفَرَهُ(17)
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!(17)
مِن أَىِّ شَيءٍ خَلَقَهُ(18)
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)(18)
مِن نُطفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ(19)
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.(19)
ثُمَّ السَّبيلَ يَسَّرَهُ(20)
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.(20)
ثُمَّ أَماتَهُ فَأَقبَرَهُ(21)
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.(21)
ثُمَّ إِذا شاءَ أَنشَرَهُ(22)
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.(22)
كَلّا لَمّا يَقضِ ما أَمَرَهُ(23)
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.(23)
فَليَنظُرِ الإِنسٰنُ إِلىٰ طَعامِهِ(24)
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.(24)
أَنّا صَبَبنَا الماءَ صَبًّا(25)
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.(25)
ثُمَّ شَقَقنَا الأَرضَ شَقًّا(26)
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-(26)
فَأَنبَتنا فيها حَبًّا(27)
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.(27)
وَعِنَبًا وَقَضبًا(28)
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-(28)
وَزَيتونًا وَنَخلًا(29)
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -(29)
وَحَدائِقَ غُلبًا(30)
அடர்ந்த தோட்டங்களையும்,(30)
وَفٰكِهَةً وَأَبًّا(31)
பழங்களையும், தீவனங்களையும்-(31)
مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم(32)
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,(32)
فَإِذا جاءَتِ الصّاخَّةُ(33)
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -(33)
يَومَ يَفِرُّ المَرءُ مِن أَخيهِ(34)
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -(34)
وَأُمِّهِ وَأَبيهِ(35)
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;(35)
وَصٰحِبَتِهِ وَبَنيهِ(36)
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-(36)
لِكُلِّ امرِئٍ مِنهُم يَومَئِذٍ شَأنٌ يُغنيهِ(37)
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.(37)
وُجوهٌ يَومَئِذٍ مُسفِرَةٌ(38)
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.(38)
ضاحِكَةٌ مُستَبشِرَةٌ(39)
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.(39)
وَوُجوهٌ يَومَئِذٍ عَلَيها غَبَرَةٌ(40)
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.(40)
تَرهَقُها قَتَرَةٌ(41)
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.(41)
أُولٰئِكَ هُمُ الكَفَرَةُ الفَجَرَةُ(42)
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.(42)